இவ்வளவு தாங்க! குயின் திரை விமர்சனம்

 

இவ்வளவு தாங்க! குயின் திரை விமர்சனம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி வெளிவந்துள்ள குயின் வெப் சிரீஸ் குழந்தை பருவத்தில் ஜெயலலிதா வறுமையில் இருந்ததையும் அதன்பின் எப்படியெல்லாம் வாழ்வில் உயர்ந்தார் என்பதையும் விளக்கிறது. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி வெளிவந்துள்ள குயின் வெப் சிரீஸ் குழந்தை பருவத்தில் ஜெயலலிதா வறுமையில் இருந்ததையும் அதன்பின் எப்படியெல்லாம் வாழ்வில் உயர்ந்தார் என்பதையும் விளக்கிறது. 

தி குயின் என்ற பெயரில் அனிதா சிவகுமாரன் எழுதிய புத்தகத்தை தழுவி கெளதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள குயின் மொத்தம் 11 பகுதிகளை கொண்டது. இதில் ஜெயலலிதாவாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனின் பெயர் ஷக்தி சேஷாத்ரி. மூன்று பகுதிகள் வரை ஜெயலலிதாவின் இளமை காலங்களை விளக்குகிறது. 4 ஆவது பகுதியில் தான் GMR எனும் MGR கதாபாத்திரமுன் கருணாமூர்த்தி என்ற பெயரில் கருணாநிதி கதாபாத்திரமும் ஜனனி என்ற பெயரில் ஜானகி கதாபாத்திரமும் இணைகிறது.

queen

குழந்தைப் பருவத்தில் ஜெயலலிதாவிற்கு படிப்பில் இருந்த ஆர்வம், பள்ளியில் இருந்த தலைமை பண்பு, வறுமையால் பள்ளியில் ஜெயலலிதா சந்தித்த அவமானங்கள் ஆகியவற்றை 3 பகுதிகள் சொல்கின்ற,து அதன்பின் ஜெயலலிதா திரைத்துறைக்குள் நுழைகிறார். இதையடுத்து அவரது குடும்ப வறுமை  நீங்குகிறது. ஜெயலலிதா திரைத்துறைக்குள் சந்தித்த கஷ்டங்களை அழகாக விளக்குகிறது. ஜிஎம் ஆருடன் ஜெயலலிதா நெருக்கமாக பேசுவதால் ஜானகிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. ஜெயலலிதாவின் தாய் இறந்த பிறகு அவர், சசிகலாவுடன் நெருக்கமாகிறார். எம்ஜிஆரின் இறுதி ஊர்வலத்தின்போது ஜெயலலிதா அமரர் ஊர்தியில் இருந்து கீழே இறக்கி விட்ட பின்னர் தீவிர அரசியலுக்குள் நுழைந்ததை பிரதானப்படுத்தி வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் குழந்தை பருவம், எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா உறவு, அரசியல் வாழ்க்கை இவற்றை மையமாக கொண்டே இந்த சீரிஸ்  எடுக்கப்பட்டுள்ளது.