இவ்ளோ வயசாகியும்.. அட்டிட்யூட் காட்டும் மோமோ: மும்தாஜ் மீது பாலாஜிக்கு அப்படி என்ன காண்டு?

 

இவ்ளோ வயசாகியும்.. அட்டிட்யூட் காட்டும் மோமோ: மும்தாஜ் மீது பாலாஜிக்கு அப்படி என்ன காண்டு?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்தாஜ் மற்றும் பாலாஜி ஆகியோர் நேரடியாக மோதிக் கொள்ளும் புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா ஆகியோர் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர். இந்த வாரம் நேரடி நாமினேஷனுக்கு ரித்விகாவும், கமல்ஹாசனின் பரிந்துரை பேரில் ஐஸ்வர்யாவும் நாமினேட் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள முதல் சீசன் போட்டியாளர்கள் வந்ததிலிருந்து மும்தாஜை டார்கெட் செய்வது போன்று புரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் மும்தாஜின் அட்டிட்யூட் குறித்து ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிடம் பாலாஜி நேரடியாக புகார் கூறுகிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் புதுசா யார் வந்தாலும் அவங்க கூட சேந்துக்குற புத்தி எனக்கில்ல என மும்தாஜை மிக கடுமையாக பாலாஜி விமர்சனம் செய்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் புதிதாக முதல் சீசன் போட்டியாளர்கள் வந்துள்ள நிலையில், பாலாஜி-மும்தாஜ் இடையே வெடித்திருக்கும் சண்டை பரபரப்பை கூட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

#BiggBossTamil2 #VivoBiggBoss #பிக்பாஸ்2 #BiggBossTamilSeason2