“இவுங்கள நம்பி  பணத்தை போட்டா நாமத்த போடுவாங்களா ” வங்கி அதிகாரி உதவியுடன் வங்கியில் ரூ .200 கோடி  மோசடி… 

 

“இவுங்கள நம்பி  பணத்தை போட்டா நாமத்த போடுவாங்களா ” வங்கி அதிகாரி உதவியுடன் வங்கியில் ரூ .200 கோடி  மோசடி… 

மும்பையை சேர்ந்த  தஸ்லிம் அன்சாரி (34) என்ற நபர் செம்பூரில் உள்ள சிந்துஸ் வங்கியில் பணிபுரிந்து வந்தார், அவர்  வங்கி சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை சிலருக்கு தெரிவித்து வங்கியின் பெரிய மோசடிக்கு உறுதுணையாக இருந்தார்.

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து ரூ .200 கோடியை வேறு கணக்கில் மாற்ற முயற்சித்ததாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மும்பையை சேர்ந்த  தஸ்லிம் அன்சாரி (34) என்ற நபர் செம்பூரில் உள்ள சிந்துஸ் வங்கியில் பணிபுரிந்து வந்தார், அவர்  வங்கி சம்பந்தப்பட்ட முக்கிய தகவல்களை சிலருக்கு தெரிவித்து வங்கியின் பெரிய மோசடிக்கு உறுதுணையாக இருந்தார்.அவர் மூலம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.200 கோடியை கொல்கத்தாவில் உள்ள மற்றொரு கணக்கிற்கு  ‘ஹவாலா’ மூலம் மாற்ற திட்டமிடபட்டது. 

account hack

செவ்வாயன்று ஹேக்கிங் செய்வதற்கான முயற்சியைத் திட்டமிடும்போது அவர்  சில தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியைப் பெறும்போது  சிக்கினார்.அவரிடமிருந்து ஒரு ஐபாட், ஆறு மொபைல் போன்கள், ஒரு வங்கி அறிக்கை மற்றும் வெற்று காசோலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த மெகா மோசடியில் அன்சாரி தவிர, கைது செய்யப்பட்ட மற்ற நபர்கள் நசீம் சித்திகி (35) (டெல்லியைச் சேர்ந்தவர்), குஞ்சீவ் பராயியா (56), சரோஜ் சவுத்ரி (25), சதீஷ் குப்தா (32), அனந்த் கோஷ் (34), ஆனந்த் நல்வாடே (38) ஆகியோர் .
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (மோசடி) மற்றும் 511 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்