“இவர் கூட நடிக்க ஆசையா இருக்கு சாமி” : சீனியம்மாள் பாட்டியின் கனவு நிறைவேறுமா?

 

“இவர் கூட  நடிக்க ஆசையா இருக்கு சாமி” : சீனியம்மாள் பாட்டியின் கனவு நிறைவேறுமா?

அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளி வந்த படம் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பாட்டியாக நடித்துள்ளார்.

மதுரையை சேர்ந்தவர் சிட்டுக் குருவி சீனியம்மாள் பாட்டி. 80 வயதாகும் இவர் ரஜினியின்  சிவாஜி, விஜய்யின் வேலாயுதம், குறிப்பாக 2017 ஆம் ஆண்டு  அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளி வந்த படம் மெர்சல், அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு பாட்டியாக நடித்துள்ளார்.

ttn

அதிலும் மெர்சல் படத்தில் இவர் நடித்த சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரம் சீனியம்மாள் பாட்டியை  மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.  இது தவிர சீரியல்களிலும் நடித்து வருகிறார். 

tgn

இந்நிலையில் சமீபத்தில் சீனியம்மாள் பாட்டி பேட்டி ஒன்றில், ‘எனக்கு அமிதாப்பச்சனுடன் சேர்ந்து நடிக்க ஆசை. நான் தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். அதனால் இந்தியிலும் நடிக்க ஆசையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.