இவர்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்! கஸ்தூரி அதிரடி

 

இவர்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர்! கஸ்தூரி அதிரடி

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தான் முதல்வராக வர யோசித்தது இல்லை. படித்த, திறமை வாய்ந்த இளைஞரை முதல்வராக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க முடியும். இல்லை என்றால் தொடங்கி பயனில்லை” என்று கூறிச் சென்றார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “தான் முதல்வராக வர யோசித்தது இல்லை. படித்த, திறமை வாய்ந்த இளைஞரை முதல்வராக்க வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எழுச்சி இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க முடியும். இல்லை என்றால் தொடங்கி பயனில்லை” என்று கூறிச் சென்றார். கட்சி ஆரம்பிப்பீர்களா, இல்லையா அதை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று நிருபர்கள் கேட்க, அதற்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.

rajinikanth

ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி, ரஜினி ஏன் செய்தியாளர்களை சந்தித்தாருனே தெரியல. இது அவசியம் இல்லாத சந்திப்பு. ரஜினி நிச்சயம் தன்னோட கட்சிப் பெயரை அறிவிக்கப்போறார்னு நானும் சக ரசிகர்கள் போல பெரிய எதிர்பார்ப்போட இருந்தேன்.  ஆனால் இது பெரிய ஏமாற்றம்தான் எல்லோருக்கும். அரசியல்னா நேரடியா களத்துல இறங்கனும். வெற்றியோ தோல்வியோ அவர்தான் களத்துக்கு வரணும். ஜெயலலிதா பர்கூர் தொகுதியில நின்னு தோல்வியை சந்திக்கவில்லையா…?  அதுபோல தான்… தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. அரசியல் ஒரு சாக்கடைனு சொல்றாங்க… மேலே நின்னுட்டு இருந்தா எப்ப? சாக்கடை நாறுது நாறுதுனு சொல்லாமல் களத்துள இறங்கி சுத்தம் பண்ணமும். ரஜினி வீட்டில் இரண்டு மருமகன்கள் இருக்காங்க… அவர்களில் ஒருவரை அதாவது விசாகன் அல்லது தனுஷை அவரு முதலமைச்சர் வேட்பாளாரா அறிவிக்க வாய்ப்பிருக்கு!” என தெரிவித்தார்.