‘இவரே கத்து வாராம்..இவரே shuuu ன்னு சொல்லுவாராம்’ : மாஸ்டர் போஸ்டரின் வரவேற்பும் மீம்ஸ்களும்…!

 

‘இவரே கத்து வாராம்..இவரே shuuu ன்னு சொல்லுவாராம்’ : மாஸ்டர் போஸ்டரின் வரவேற்பும் மீம்ஸ்களும்…!

ஒரு கையால்  முடியை கோதிய படி மாஸாக போஸ்  கொடுத்திருந்தார். இது  விஜய் ரசிகர்கள் மத்தியில் கூடுதல்  எதிர்பார்ப்பை கூட்டியது. 

பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப்  படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம்  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

ttn

மாஸ்டரின் ஃபஸ்ட்  லுக் போஸ்டர் கடந்த 31 ஆம் தேதி புத்தாண்டையொட்டி வெளியிடப்பட்டது. அதில் விஜய் மேஜை ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு, கைக்காப்பு ஒன்றினை சுழற்றிவிட்டபடி ஒரு கையால்  முடியை கோதிய படி மாஸாக போஸ்  கொடுத்திருந்தார். இது  விஜய் ரசிகர்கள் மத்தியில் கூடுதல்  எதிர்பார்ப்பை கூட்டியது. 

ttn

இதை தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில்  செகண்ட் லுக் வெளியானது. அதாவது  பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அந்த போஸ்டர் இருந்தது. அதில் மாணவர்களுக்கு மத்தியில் விஜய் டெரர்  லுக்கில் இருந்தார்.

ttn

இந்நிலையில் நேற்று மாலை படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.  அதில் விஜய்யும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதியும் ஆக்ரோஷமாக சண்டையிடும்படி ஒருவரை ஒருவர் பார்த்து கத்திக்கொள்கிறார்கள்.

ttn

மிரட்டலாக இருக்கும் இந்த போஸ்டர் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ttn

 

TTN

 

 

 

ttn

'இவரே கத்து வாராம்..இவரே shuuu ன்னு சொல்லுவாராம்' : மாஸ்டர் போஸ்டரின் வரவேற்பும் மீம்ஸ்களும்...!

டிவிட்டரில் ட்ரெண்டிங்கில்  இருக்கும் மாஸ்டர் போஸ்டர் குறித்து சிலர் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்தும் வருகிறார்கள். 

Image டிவிட்டர்