இவருடன் டேட்டிங் செல்ல ஆசை!? நடிகை தமன்னா அசத்தல் பதில்!

 

இவருடன் டேட்டிங் செல்ல ஆசை!? நடிகை தமன்னா அசத்தல் பதில்!

பாலிவுட் நடிகர்களில் யாருடன் உங்களுக்கு டேட்டிங் செல்ல ஆசை? என்ற கேள்விக்கு நடிகை தமன்னா  விக்கி கவுசல்  பெயரை கூறியுள்ளார். 

மும்பை:  பாலிவுட் நடிகர்களில் யாருடன் உங்களுக்கு டேட்டிங் செல்ல ஆசை? என்ற கேள்விக்கு நடிகை தமன்னா  விக்கி கவுசல்  பெயரை கூறியுள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு உரியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியது. இந்த மொத்த நிகழ்வுகளும் ‘ உரி தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் பாலிவுட்டில் படமாகியது. இதில் விக்கி கவுசல், பரேஷ் ராவல், யாமி கவுதம் உட்படப் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

uri

இப்படத்திற்குப் பிறகு இதில்  நடித்த  விக்கி கவுசல் இளம்பெண்களின் கனவு நாயகனாக மாறினார். உரி படத்தில் ராணுவ வீரராக நடித்த பின் இவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  கூடி கொண்டே போகிறது. அந்த அளவிற்கு இவர் பெண்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதில் நடிகை தமன்னா மட்டும் விதிவிலக்கா என்ன? என்னடா பாலிவுட் நடிகர் செய்தியில் தமன்னாவின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்கிறீர்களா?  

tamannah

ஆமாம் சமீபத்தில், நடிகை தமன்னாவிடம், பாலிவுட் நடிகர்களில் யாருடன் உங்களுக்கு டேட்டிங் செல்ல ஆசை? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காத  தமன்னா, விக்கி கவுசல் என்று பதிலளித்தார். முன்னதாக நடிகை தமன்னா என்னைக் கவர்ந்த ஹீரோ ரித்திக் ரோஷன், அவருடன் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

tammana

தமிழில் தமன்னா கடைசியாகக் கண்ணே கலைமானே  படத்தில் நடித்திருந்த நிலையில், அது எதிர்பார்த்தளவு வெற்றி பெறவில்லை. அதனாலோ என்னவோ, ஹிந்தியில் பெரிய நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை பிடித்து விட  வேண்டும் என்று பாலிவுட் நடிகர்களின்  பெயரையே தொடர்ந்து சொல்லி வருகிறார் என்று நெட்டிசன்கள் புலம்பித் தள்ளுகின்றனர். 

இதையும் வாசிக்க: வந்தா ராஜாவா தான் வருவேன்…ஹெச்.ராஜா தான் டாப்; பட் அட்மின் நாட் ஹேப்பி?