‘இவன இந்தவருஷத்துக்குள்ளேயே ஒரு வழி பண்ணீடணும்’… பிரேம்ஜி ட்வீட்டை பார்த்து கடுப்பான கங்கை அமரன்

 

‘இவன இந்தவருஷத்துக்குள்ளேயே ஒரு வழி பண்ணீடணும்’… பிரேம்ஜி ட்வீட்டை பார்த்து கடுப்பான கங்கை அமரன்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. 

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்துகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். ஆனால்  நடிகர் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில், Happy Premgi Day என்று குறிப்பிட்டு  தனது DPயில் முரட்டு சிங்கிள்  டா என்று வைத்திருந்தார்.  இதற்கு பலரும் கிண்டலாக  கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

ttn

குறிப்பாக பிரேம்ஜியின் அண்ணனும் பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபு, என்ன கொடுமை சார் இது என்று பதிவிட்டுள்ளார்.  

அதேபோல் இவர்களின் தந்தையும் இயக்குநருமான கங்கை அமரன், ‘பிரபு நாம மட்டும் எவ்வளவு கஷ்டப்படறோம் … இவன இந்தவருஷத்துக்குள்ளேயே ஒரு வழி பண்ணீடணும் … நம்மளால இப்பிடி சிரிக்க முடியலியே !!!! ‘ என்று பதிவிட்டுள்ளார். 

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரேம்ஜி மாநாடு படத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில்   கல்யாணி பிரியதர்ஷன்,  பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.