இளைய திலகம் பிரபுவுக்கு மகன் சொன்ன வாழ்த்து?!

 

இளைய திலகம் பிரபுவுக்கு மகன் சொன்ன வாழ்த்து?!

சின்ன தம்பி, கட்டுமரக்காரன், செந்தமிழ் பாட்டு என சோலோ ஹீரோவாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். கமல்ஹாசனுடன் ‘வெற்றி விழா’, ரஜினியுடன் ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

1982-ஆம் ஆண்டு சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சங்கிலி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பிரபு. இவருடைய தந்தை சிவாஜி கணேஷனுக்கு முதலில் இவர் நடிப்பதில் விருப்பமில்லை என்றாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். அதற்கு காரணம் பிரபுவின் இயல்பான நடிப்பு, தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றுத் தந்தது.

adcsdv

சின்ன தம்பி, கட்டுமரக்காரன், செந்தமிழ் பாட்டு என சோலோ ஹீரோவாக நடித்து பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். கமல்ஹாசனுடன் ‘வெற்றி விழா’, ரஜினியுடன் ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’ போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக இயங்கி வரும் பிரபு, திரையுலகுக்கு வந்து 37 ஆண்டுகள் நிறைவடைகிறது.

வாரிசு நடிகர்கள் எத்தனையோ பேர் திரைத்துறையில் நிலைக்க முடியாமல் போனதை பார்த்திருப்போம், பிரபு தனது நடிப்புத் திறனால் இத்தனை ஆண்டுகாலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். அவரது மகன் விக்ரம் பிரபு தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். தமிழ் சினிமா ஆளுமைகள் பலருடன் இணைந்து நடித்த பெருமை பிரபுவையே சேரும்.

இதையும் வாசிக்க:  காதல் திருமணம் செய்த பெண்ணுக்கு, ஆண்கள் கொடுத்த கொடூர தண்டனை: வைரல் வீடியோ!