இளைய தளபதி, தளபதியுடன் சேர்ந்துகொள்ளட்டும்… எங்களுக்கு வேண்டாம் – அமைச்சர் ஜெயக்குமார் 

 

இளைய தளபதி, தளபதியுடன் சேர்ந்துகொள்ளட்டும்… எங்களுக்கு வேண்டாம் – அமைச்சர் ஜெயக்குமார் 

இளைய தளபதி நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துக்கொள்ளட்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இளைய தளபதி நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்துக்கொள்ளட்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி- செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்திக்கு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில், துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Stalin vijay
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,  நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது. அதிமுகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதால் திமுகவிற்கு பயன் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் விஜயை சந்தித்து பேசியுள்ளனர். அதனால் திமுகவுடனே நடிகர் விஜய் சேர்ந்து கொள்ளட்டும். அமெரிக்க, ரஷ்ய அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும்” என்று கூறினார்.