’இளையராஜா 75’ விழாவிற்கு ரஜினி, கமல் வருகை

 

’இளையராஜா 75’ விழாவிற்கு ரஜினி, கமல் வருகை

‘இளையராஜா 75’ விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வருவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை: ‘இளையராஜா 75’ விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் வருவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘இளையராஜா 75’ விழாவை நடத்தவுள்ளது. அவ்விழாவிற்கு விழா குழுவினர்கள், தென்னிந்திய திரையுலகை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

nadigar sangam

இந்நிலையில், நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ் துரைராஜ், பொருளாளர்  எஸ்.ஆர் பிரபு, ‘இளையராஜா 75’ குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் மனோபாலா ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ‘இளையராஜா 75’ விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவரும் நிச்சயம் வருகிறேன் என்று உறுதியளித்துள்ளார். நடிகர் கமல் ஹாசனும் வருவதாகக் கூறியிருக்கிறார்.