இளையராஜா-யுவன் கூட்டணியில் விஜய் சேதுபதி!

 

இளையராஜா-யுவன் கூட்டணியில் விஜய் சேதுபதி!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

’பியார் பிரேமா காதல்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்தப்படத்தை இயக்குநர் சீனுராமசாமி இயக்குகிறார். இந்த படத்தின் நாயகனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது எதார்த்த நடிப்பால் மக்களை தன் வசப்படுத்தியிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘96’, போன்ற திரைப்படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இமாலய வெற்றியை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உட்பட பெயரிடப்படாத இன்னும் 2-3 திரைப்படங்களை விஜய் சேதுபதி தன் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே, யுவன் தயாரிக்கும் அடுத்தப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தின் பணிகள் டிசம்பர் மாதம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனுராமசாமி-விஜய் சேதுபதி-யுவன் கூட்டணி அமைத்த ‘தர்மதுரை’ திரைப்படம் சூப்பர் ஹிட்டான நிலையில், மீண்டும் இந்த கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.