இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வழக்கை உடனே  முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ வழக்கை உடனே  முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது மியூசிக் ஸ்டுடியோவில் தான் இதுவரைக்கும் 6,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளதாகவும், ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். 

பிரசாத் ஸ்டுடியோஸ் இளையராஜாவை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற சொன்ன தகராறு பல மாதங்களாக நடந்து வருகிறது. 1976 ஆம் ஆண்டு முதல் அவர் இசையமைத்த ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகம் கேட்டுள்ளது.

ilayaraja-in-studio

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தனது மியூசிக் ஸ்டுடியோவில் தான் இதுவரைக்கும் 6,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளதாகவும், ஸ்டூடியோவை விட்டு வெளியேறுமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்றும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். 

பிரசாத் ஸ்டூடியோவின் இந்த  முடிவுக்கு திரையுலகினர் பலரும் கண்டங்கள் தெரிவித்தனர். வீட்டை விட  அதிக நேரம் செலவழித்து, மக்களுக்கு இசை காவியங்களை வழங்கிய அந்த இடத்தை விட்டு எப்படி வெளியேற சொல்லலாம் என்று பொங்கினர்.

prasath-studio-issue

இந்நிலையில்,  இந்தவழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.