இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை: இயக்குநர் எஸ்.ஏ.சி. ரியாக்ட்!

 

இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை: இயக்குநர் எஸ்.ஏ.சி. ரியாக்ட்!

ஒரு படத்துக்கு இசையமைக்கப் படத்தின் தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை என்று விஜய்யின் தந்தையும், இயக்குநருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

சென்னை: ஒரு படத்துக்கு இசையமைக்கப் படத்தின் தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை என்று விஜய்யின் தந்தையும், இயக்குநருமான  எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

தான் இசையமைத்த பாடல்களை பொது நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் பாடுவதற்கு பாடகர்கள் தனக்கு உரிய ராயல்டி தொகையைச் செலுத்த வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்திருந்தார். இவ்விவகாரத்தில் தயாரிப்பாளர்களுக்கே உரிமை கோரும் உரிமை உள்ளதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.இதையடுத்து  பி.டி.செல்வகுமார் தலைமையில், அன்புச்செல்வன், மீராகதிரவன், மணிகண்டன் உள்ளிட்டோர் இளையராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘ஒரு படத்துக்கு இசையமைக்கப் படத்தின் தயாரிப்பாளர் பணம் கொடுக்கும்போது இளையராஜா காப்புரிமை கேட்பது நியாயமில்லை. படத்தின் இயக்குநர்தான் எந்த சூழ்நிலைக்கு பாடல் தேவை என்பதை இசையமைப்பாளரிடம் கூறுவார். அதற்கு ஏற்பவே இசையமைப்பாளர் இசையமைக்கிறார். அந்த இசைக்கான வரிகளைப் பாடலாசிரியர் எழுதுகிறார். அவருக்கு தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார். இசையமைப்பாளருடன் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் தான் சம்பளம் கொடுக்கிறார். எனவே ஒரு தயாரிப்பாளர் தான் பணத்தை செலவு செய்து ஒரு பாடலை சொந்தமாக்குகிறார்’ என்று கூறியுள்ளார்.