இளையராஜா இசை நிகழ்ச்சியில் கமல் பாடுகிறார்!

 

இளையராஜா இசை நிகழ்ச்சியில் கமல் பாடுகிறார்!

இளையராஜா 75ல் நடிகர் கமல் ஹாசன் ஒரு பாடல் படவுள்ளதாகக் கூறியுள்ளார்

சென்னை: இளையராஜா 75ல் நடிகர் கமல் ஹாசன் ஒரு பாடல் படவுள்ளதாகக் கூறியுள்ளார்.

இளையராஜா 75 நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள் நடனம் ஆட இருக்கிறார்கள். இதற்கான ஒத்திகை ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்யச் சொல்லி நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக விஷால் தலைமையின் குழு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை அழைக்கலாம் என்று முடிவுசெய்து அணுகியிருக்கிறது. அந்த முயற்சியும் பாஸிடிவாக அமைந்து விட்டது. திரையுலகினரால் மட்டும் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இப்போது அரசு மரியாதையோடு நடக்க இருக்கிறது.

ilayaraja

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை மேடையில் பாட இருக்கிறார். அந்த பாடல் என்ன என்பதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இதன் ஒத்திகை நிகழ்ச்சி தினமும் பிரஷாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. அப்போது கமல் ஹாசன் இளையராஜா வை சந்தித்து பேசியுள்ளார்.