இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு பாரதிராஜா திடீர் விசிட்!

 

இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு பாரதிராஜா திடீர் விசிட்!

16 வயதினிலே காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் பாரதிராஜா-இளையராஜா. மண் வாசனையோடு எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு, இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே மாஸ் ஹிட்.. அந்த அளவிற்கு இளையராஜா- பாரதிராஜா காம்போ ஸ்பெஷல்…

16 வயதினிலே காலத்திலிருந்தே நண்பர்களாக இருந்தவர்கள் பாரதிராஜா-இளையராஜா. மண் வாசனையோடு எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு, இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களுமே மாஸ் ஹிட்.. அந்த அளவிற்கு இளையராஜா- பாரதிராஜா காம்போ ஸ்பெஷல்…

‘நாடோடி தென்றல்’ வரை பாரதிராஜாவின் படங்களுக்கு இசையமைத்த இளையராஜா, அதன் பிறகு ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை. ஆனால் பொது நிகழ்ச்சிகளில் பார்த்தால் பரஸ்பரம் விசாரிப்பதும், இளையராஜாவின் வீட்டிற்கு சென்று அவரை நலம் விசாரிப்பதும் பாரதிராஜாவின் வழக்கம். இளையராஜாவுக்கு ஒரு பிரச்னை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் பாரதிராஜாவே. இப்படி இருக்கையில், பாரதிராஜா திரைப்பட இயக்குநர்களை தயாரிக்கும் பயிற்சிப்பட்டறை ஒன்றை நிறுவியுள்ளார். அதன் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கும்படி இளையராஜாவின் வீட்டிற்கே சென்று அழைத்தார் பாரதிராஜா. ஆனாலும்  இளையராஜா  விழாவிற்கு  வரவில்லை ! 

திறப்பு விழாவின் போது நண்பர்களிடம் தனிப்பட்ட  முறையில்  பேசிய பாரதிராஜா, “என் வீட்டில்  எந்த  நல்ல காரியம்  நடந்தாலும்  இளையராஜா இல்லாமல் நடக்காது. நான்  சென்னைக்கு  வந்து  சினிமாவில் ஜெயிச்சு இவ்வளவு காலத்துக்கு  அப்புறம் …. அடுத்த  தலைமுறைக்கு  நான் கற்றுக்கொண்ட  அனுபவங்களைக்  கடத்த  ஒரு  இன்ஸ்ட்யூட்  ஆரம்பிச்சிருக்கேன் ; அவன் இல்லாதது  வருத்தமாத்தான் இருக்கு .காலம்  எல்லாத்தையும்  சரி செய்யும் . என் நண்பன் ஒருநாள் நிச்சயம்  இங்கு வருவான்னு நம்புறேன்” என்று நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கிறார். அந்த நம்பிக்கை இன்று நிறைவேறியிருக்கிறது.! 

Bharathiraja

பிரசாத் ஸ்டுடியோஸ் நிர்வாகத்துத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டால் வீட்டிலேயே இசையமைத்து கொண்டிருக்கும் இளையராஜாவை பார்க்க இன்று  திடீர் விசிட் அடித்திருக்கிறார் பாரதிராஜா. இயக்குனர்   வரும்போது  இளையராஜா, வீட்டின்  மேல் தளத்திலுள்ள யுவனின்  ஸ்டுடியோவில்  இசை பணியில்  இருந்திருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்  போதே,  யுவனின்  புது  ஸ்டுடியோவை  பாரதிராஜாவுக்கு  சுற்றிக்  காண்பித்திருக்கிறார்  இளையராஜா . “பிரமாதமா  பண்ணியிருக்கான்..”   என்று  மனம் திறந்து பாராட்டிய  கையோடு  ” நீதான்  என்னோட  இன்ஸ்ட்யூட்டை  ஒரு  தடவைகூட  வந்து  பார்க்க  மாட்டேன்னுட்ட ..”  என்று  வெகு  இயல்பாகச்  சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாரதிராஜா . கொஞ்சம்  கூட  தாமதிக்காமல் “வா  போவோம் ” என்று  இளையராஜா  சொல்ல.. அந்த  ஒரு  கணத்தில்  ஏற்பட்ட  உணர்வுகளை  வார்த்தைகளால்  எப்படிச்  சொல்வது ..!? 

இளையராஜாவைக்  கையோடு தனது பயிற்சிப் பட்டறைக்கு அழைத்துவந்தார் பாரதிராஜா. பிரிந்த நண்பர்கள்  ஒன்றிணைந்தால்…  மீண்டும் முதல் மரியாதை போன்ற ஒரு அழகியலான திரைப்படம் கொடுப்பார்கள் என்று நம்புவோம்.