இளையராஜாவின் மனதுக்கு நெருக்கமான தபேலா கன்னையா காலமானார்…42 ஆண்டுகால நண்பர்…

இளையராஜாவின் மனதுக்கு நெருக்கமான தபேலா கன்னையா காலமானார்…42 ஆண்டுகால நண்பர்…

இசைஞானி இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்திலிருந்தே அவருடை இசைக்குழுவில் தபேலா கலைஞராகப் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர் கன்னையா நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 87.

இசைஞானி இளையராஜா ‘அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான காலத்திலிருந்தே அவருடை இசைக்குழுவில் தபேலா கலைஞராகப் பணியாற்றிய மூத்த இசைக் கலைஞர் கன்னையா நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 87.

kannaiya

ராஜா குறித்த தனது பேட்டிகளில் ‘இந்த ஜென்மத்துல கடைசிவரைக்கும் இளையராஜா கூட மட்டும் தான் பணியாற்றுவேன்’ என்று பெருமை பொங்கக் கூறும் கன்னையா ராஜாவின் 1000க்கும் மேற்பட்ட படங்களில் அத்தனை தபேலா இசைகளையும் வாசித்தவர். மிகவும் கோபக்காரராக அறியப்பட்ட ராஜா தன்னை இந்த 42 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோபித்துக்கொண்டதில்லை என்றும் ‘அண்ணே’ என்ற எப்போதும் அன்பொழுக அழைப்பார் என்றும் பெருமையுடன் கூறுவார்.

வயது மூப்பு காரணமாக சில மாதங்களாக ஓய்விலிருந்த கன்னையாநேற்று நள்ளிரவு காலமானார். அவர் காலமான செய்தி ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாலை 5 மணிக்கே அவருக்கு அஞ்சலி செலுத்த முதல் ஆளாகச் சென்ற ராஜா, அவரது குட்ம்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களிடன் தனது சொந்த அண்ணனின் இழப்பாக உணர்வதாகத் தெரிவித்தது அனைவரையும் நெகிழ வைத்தது.