இளைஞர்கள் போக துடிக்கும் கோவா ட்ரிப்! அப்படி என்னதான் இருக்கு இந்த கோவாவுல?! 

இளைஞர்கள் போக துடிக்கும் கோவா ட்ரிப்! அப்படி என்னதான் இருக்கு இந்த கோவாவுல?! 

கோவா என்றாலே எல்லாருக்குமே ரொம்ப புடிக்கும், குறிப்பா  இளைஞர்களுக்கு  சொல்லவே வேண்டாம் ; அப்படி  ஒரு கிரேஸ்!   இன்னும் சில பேர் கோவா ஒரு ஃபாரின்  கண்ட்ரி என்றே நினைக்கிறார்கள். உண்மையில கோவா ஃபாரின் கண்ட்ரி இல்லைங்க அது இந்தியாவுல இருக்குற ஒரு அழகான குட்டி  மாநிலம். இதனை சுதந்திரத்திற்கு முன்னர் போர்த்துக்கீசியர்கள்,ஆங்கிலேயர்கள் ஆண்டதாலும் , அங்கு இப்போதும்  வெளிநாட்டவர் அடிக்கடி வருவதும் போவதுமாக இருப்பதால் இப்போதும் அதனை பார்க்கும்போது ஒரு ஃபாரின் பீல் வருவது சகஜம் தான்.

goa

கோவாவின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்ப்போம்;

உங்களால் போர்துக்கீஸ்  போகமுடியவில்லை என்றால் நீங்கள் தாராளமாக கோவாவிற்கு போயிட்டு வரலாம்! இது காஸ்ட் எஃபக்ட்டிவ் மற்றும் உங்களுக்கு போர்த்துகீசிய கட்டிடங்களையும் பார்த்தது போல இருக்கும். இங்குள்ள தேவாலயங்கள் உங்களுக்கு ஸ்டன்னிங் பீல் குடுக்கும் அதுமட்டுமல்லாமல் கட்டட அமைப்புகள் அவ்வளவு பிரமாண்டமாக வடிவமைத்திருப்பார்கள்.

goa

கோவாவில் பீச்சுகள் மிகவும் அமைதியான சூழலை தரும் விதத்ததில் இருக்கும், இது டூரிஸ்ட்டுகள் அதிகம் வரும்  இடம் என்பதால் கோவாவின் வடபகுதியில் இருக்கும் பீச்சுகள் சற்று கூட்டத்துடனே காணப்படும். ஆனாலும் டௌன் சோளத்தில் இருக்கும் அகோண்டா,பளோலேம் போன்ற பீச்சுகள் மிகவும் இதமான அனுபவத்தை தரும்.இம்முறை கோவா போனால் கண்டிப்பாக இந்த பீச்சுகளை பார்த்து வருக!

goa

கோவா ஒரு பார்ட்டி டவுன் என்பதை மறந்துபோக வேண்டாம், நீங்க தனியா நேரம் கழிக்க விரும்பவேண்டும் என்றால் கோவா உங்களை அப்படி இருக்க விடாது இது கோவாவிற்கே உரிய ஒரு தனித்துவம். இங்குள்ள உணவுகள் உங்களை மெய்மறக்க செய்துவிடும்.குறிப்பாக பன்ஞ்சிம்ஸ் மம்ஸ் கிட்சன் (Panjim’s Mum’s Kitchen) அகோண்டாஸ் ஸிஸ்ட் (Agonda’s Zest) ஆகிய ஃபேமஸ் உணவகங்கள் உங்களுக்கு அசரவைக்கும் போர்த்துகீசிய  உணவுகளை வழங்கும்.

goa

கோவா என்று சொன்னாலே மனதிற்குள் ஒரு ரிலாக்சேசஷன் குடிபுகுந்துவிடும் அப்படிப்பட்ட ஒரு அழகிய இடம் கோவா! ‘கேசினோ’ என்று சொல்லப்படும் சீட்டு சூதாட்டம் விதிகளின் படி தடை செய்யப்பட்டிருந்தாலும் கோவாவில் இது சட்டங்களுக்கு உட்பட்டு நடைபெறுகிறது. 

goa

இப்போது கோவாவில் வரும் டூரிஸ்டுகளுக்கு ஹாப்-ஆன் ஹாப்-ஆப் பஸ்கள் பயணிகளுக்கென அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, இவை சைட் சீயிங்கிற்கென பிரத்யேகமாக இருக்கின்றன. இதில் உங்களுக்கு 1 அல்லது 2 நாள் பாஸ் எடுத்துவைத்து சுற்றி பார்க்கலாம்.

இவ்வளோ இருக்கா கோவாவுல என்று ஆச்சார்யமாக இருக்கிறதா? இந்தமுறை நீங்களும் ஒரு கோவா ட்ரிப் எடுங்க!