இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாதீர்கள்- அமைச்சர் ஜெயக்குமார் 

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாதீர்கள்- அமைச்சர் ஜெயக்குமார் 

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அமைச்சர் ஜெயக்குமார், “மீன் ஒரு சிறந்த உணவு என்றும் அதை அதிகமாக சாப்பிட்டால் மாரடைப்பு, கண் பார்வை கோளாறு, தோல், புற்றுநோய் உள்ளிட்ட எந்த பிரச்னைகளும் வராது. இளைஞர்கள் அரசு பணிக்கு ஆசைப்படாமல், தொழில் முணைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும். மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் பத்து மாதத்தில் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் திமுகவிற்கு ஆப்ரேஷன் சக்சஸ்… நோயாளி சாவு என்று தீர்ப்பு வர இருக்கிறது” எனக்கூறினார்.