இளைஞர்களை கவர வருகிறது ‘ஹீரோ’ கேம்!

 

இளைஞர்களை கவர வருகிறது ‘ஹீரோ’ கேம்!

யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள  புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ttn

இந்நிலையில், இப்படத்தின் புரொமோஷனுக்காக ஆக்மெண்டட் ரியாலிட்டி கேம் ஒன்றை ‘ஹீரோ’ படக்குழுவினர் நாளை (நவ.24) அறிமுகம் செய்யவுள்ளனர். ஆக்மெண்டட் ரியாலிட்டி என்றால் நிஜ உலகத்திலேயே மாய உலகத்தை இணைப்பது. நிஜ உலகின் மீது ஒரு டிஜிட்டல் லேயரைச் சேர்க்கும்  ஆக்மெண்டட் ரியாலிட்டி மூலம் ஒரு ஹீரோ கேம்மை  உருவாக்கியுள்ள படக்குழு அதை நாளை  அறிமுகம் செய்யவுள்ளது. இது இளைஞர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.