இளைஞரை தாக்கிய பெண் காவலர்: தாமாக முன்வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம்!

 

இளைஞரை தாக்கிய பெண் காவலர்: தாமாக முன்வந்து விசாரிக்கும்  மனித உரிமை ஆணையம்!

குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

கோயம்புத்தூர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர்  கிருஷ்ணவேணி. இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் லஞ்சம் கேட்பதாகவும், அப்படி கொடுக்க முடியாதபட்சத்தில் அவர்களை தாக்குவதாகவும் புகார் எழுந்தன. 

tt n

இதையடுத்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். அவரை கிருஷ்ணவேணி தாக்குவதாக வீடியோ ஒன்று வெளியானது. இதுகுறித்த புகார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செல்ல, பெண் காவலர் கிருஷ்ணவேணி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் பெண் காவலரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்ட பின் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

 


 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம்  தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. பத்திரிகைகளில் வெளியான செய்திகளைக் கருத்தில் கொண்டு தாமாக முன்வந்துள்ள இந்த ஆணையம்  புகார் அளிக்க வருவோரிடம் லஞ்சம் கேட்டது, தாக்குதல் நடத்தியது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் முறையான மற்றும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கோவை எஸ்பி-க்கு உத்தரவிட்டுள்ளது.