இளம் ஃபேஸ்புக் காதலனை காலி செய்ய ஆள் அனுப்பிய மலேசிய பெண்! – தேனியில் பரபரப்பு

இளம் ஃபேஸ்புக் காதலனை காலி செய்ய ஆள் அனுப்பிய மலேசிய பெண்! – தேனியில் பரபரப்பு

காதலித்து ஏமாற்றிய போடியைச் சேர்ந்த இளம் காதலனை கொலை செய்ய அடியாட்களை மலேசிய பெண் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி அருகே உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் சில நாட்களாக தங்கியிருந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த விடுதிக்கு வந்த போலீசார், ஒன்பது பேரிடமும் விசாரித்தனர். அனைவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே, அத்தனைப்பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களின் காரை சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

ashok kumar

போலீசாரின் வழக்கமான விசாரணைக்குப் பிறகு போடியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை கொலை செய்ய வந்ததாகவும் தங்களை மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண் அனுப்பினார் என்றும் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அசோக் குமாரை அழைத்து போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சியான பல செய்திகள் கிடைத்தன.
அசோக் குமார் பெங்களூரூவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது ஃபேஸ்புக்கில் அமுதேஸ்வரி என்ற பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஃபேஸ்புக்கில் நீண்ட நாட்கள் சேட் செய்துள்ளனர். பின்னர் அந்த நட்பு போனில் பேசும் வரை சென்றது. தன்னைப் பற்றி எந்த ஒரு அடையாளத்தையும் அந்த பெண் வெளியிடவில்லை. திடீரென்று தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அசோக் குமாரை கேட்டுள்ளார் அந்த பெண். அசோக்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுப் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், மலேசியாவிலிருந்து அசோக் குமாருக்கு போன் வந்துள்ளது. தன்னுடைய பெயர் கவிதா அருணாச்சலம் என்று கூறியுள்ளார். தான் அமுதேஸ்வரியின் அக்கா என்றும், திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதால் அமுதேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறியுள்ளார். இதனால், அசோக் குமார் அதிர்ச்சியடைந்தார்.

criminals

அந்த பெண் அசோக் குமார் வேலை செய்துவந்த நிறுவனத்துக்கு அசோக் குமார் பற்றி புகார் செய்துள்ளார். அசோக் குமார் ஏமாற்றியதால் தன்னுடைய சகோதரி தற்கொலை செய்துகொண்டார், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்போகிறோம். அசோக் குமார் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியதற்கான போன் ஆதாரங்கள் உள்ளன என்று எல்லாம் கூறியுள்ளார். இதனால், அந்த நிறுவனம் என்ன எது என்று கூட விசாரிக்காமல் அசோக் குமாரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
வேலை போனதால் அசோக் குமார் போடிக்கு வந்துவிட்டார். அதன் பிறகும் ஆத்திரம் தீராத அந்த பெண், மலேசியாவிலிருந்து தேனிக்கே வந்துள்ளார். பிரச்னையை தீர்த்துக்கொள்ளலாம் தேனியில் உள்ள ஹோட்டலுக்கு வரும்படி கூறியுள்ளார். அசோக் குமாரும் அங்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடைய தங்கையின் மரணத்துக்கு பிராயச்சித்தமாகத் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சொல்லியிருக்கிறார். அப்படி திருமணம் செய்யவில்லை என்றால் நீதான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், அசோக் குமார் தேனி போலீசாரிடம் புகார் செய்துள்ளார். அவர்கள் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.

criminals

அப்போது, அமுதேஸ்வரி, கவிதா அருணாச்சலம் என்று அசோக்குமாரிடம் பேசியது இந்த பெண்தான் என்றும் அவரது உண்மையான பெயர் விக்னேஷ்வரி என்பதும் அவரது உண்மையான வயது 45 என்றும் தெரியவந்தது. எப்படியாவது அசோக்குமாரைத் திருமணம் செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் மலேசியாவிலிருந்து தமிழகம் வந்ததாக அவர் கூறியுள்ளார்.
மலேசிய பெண் என்பதால், எச்சரித்து அவரை அனுப்பிவிட்டனர். ஆனாலும் விக்னேஷ்வரி விடவில்லை. அசோக்குமார் வீட்டுக்கே சென்று தகராறு செய்துள்ளார். பின்னர், போலீஸ் நிலையத்துக்கு சென்று அசோக்குமார் தன்னை அவதூறாக பேசியதாக புகார் அளித்துள்ளார். ஆத்திரம் தீராத விக்னேஷ்வரி, அசோக்குமாரை கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தது தெரியவந்தது. 
இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும், விக்னேஷ்வரி மீதும் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்னேஷ்வரி இந்தியாவில் உள்ளாரா அல்லது மலேசியா தப்பிவிட்டாரா என்று போலீசார் தேடி வருகின்றனர்.
முகம் தெரியாத காதல் எந்த அளவுக்கு ஆபத்தை கொண்டுவந்து சேர்க்கும் என்பதை இனியாவது அசோக்குமார்கள் உணர்வார்களா?