இளமை மாறாத அதிசய ராகத்தின் 80வது பிறந்தநாள் இன்று…மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து!

 

இளமை மாறாத அதிசய ராகத்தின் 80வது பிறந்தநாள் இன்று…மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து!

மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 14  மொழிகளில் சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 

கேரளாவைச் சேர்ந்த யேசுதாஸ் கடந்த 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பிறந்தார்.  தனது தந்தையிடம் இசை பயிற்சி, ஆர்.எல்.வி  அகாடமியில் இசை பள்ளி,  திருவனந்தபுரத்தில் இசையில் உயர்கல்வி என ஓடிக்கொண்டிருந்த யேசுதாஸ் வாழக்கையிலும்  பணம் விளையாட்டை ஆரம்பித்தது. இதனால் இசையை மேற்கொண்டு கற்க முடியாமல் போனாலும் செம்மங்குடி சீனிவாச ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் என பலரின் அறிமுகம் கிடைக்க, 1961 ஆம் ஆண்டு கால்பாடுகள் என்ற படத்தில் பாடகராக அறிமுகமானார்.

ttn

அன்றிலிருந்து இன்றுவரை இவரது பாடல் ஒலித்து  வருகிறது. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என 14  மொழிகளில் சுமார் 50 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். 

1964 ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொம்மை படத்தில் இடம்பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை பாடல் செம்ம ஹிட் அடித்தது. அதன் பிறகு தமிழிலும் முன்னணி பாடகர் வரிசையில் முந்திக்கொண்டு வந்தார் யேசுதாஸ்.  வா வா அன்பே அன்பே, ராஜராஜ சோழன் நான்… என காதல் பாடல்கள் தொடங்கி  தண்ணீத் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்…துள்ளல் பாடல்கள் வரை யேசுதாஸ் தொடர பாடல்களும் இல்லை…சங்கதிகளும் இல்லை. 

ttn

8 முறை தேசிய விருதுகள் , 43 மாநில  விருதுகள் என பிரமிக்க வைக்கும் இவரின்   ஹரிவராஸனம் பாடல் ஒலிக்கப்பட்ட  பிறகே சபரிமலை ஐயப்பன்  கோயிலில் நடைசாத்தப்படுகிறது. அப்படி பார்த்தால் ஐயப்பனுக்கும் இவர்  பேவரைட் சிங்கர் தான்.

இன்று தனது 80 ஆவது  பிறந்தநாளை கொண்டாடும்  இளமை மாறாத இந்த இளைஞருக்கு பிரதமர் முதல் சாமானிய ரசிகன் வரை வாழ்த்து மழையில் நனைய வைக்கிறார்கள்.

பிரதமர் மோடி 

மோகன் பாபு 

 

கமல் ஹாசன்