இலவச மருந்து வங்கி: 77 வயது முதியவரின் சாதனை!

 

இலவச மருந்து வங்கி: 77 வயது முதியவரின் சாதனை!

டெல்லியில் இருக்கிறார் அந்த அதிசயமனிதர்.பெயர் ஓம்கார்நாத் சர்மா.நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள்.

டெல்லியில் இருக்கிறார் அந்த அதிசயமனிதர்.பெயர் ஓம்கார்நாத் சர்மா.நீங்கள் கேள்விப்பட்டு இருக்க மாட்டீர்கள். ஏனென்றால்.அவர் அம்பானியோ, அதானியோ,சினிமா சூப்பர்ஸ்டாரோ அல்ல! நடப்பதற்கே சிரமப்படும் 77 வயது கிழவர் சர்மா,ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி டெல்லி வந்தவர்.

நொய்டாவில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீஷியனாக வேலை. 2008ம் ஆண்டில் ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்புகிற வழியில் அவர் கண்ணெதிரே ஒரு விபத்து.

omkaranath sharma

கார்கர்டோமா பகுதியில் நடந்துகொண்டு இருந்த மெட்ரோ ரயில் பணசர்மாவின் பெரிய இரும்புகர்டர்கள் சரிந்து விழுந்த பல தொழிலாளர்களுக்கு பலத்த காயம். சர்மாவுக்கு,அறுபத்தைந்து வயது அப்போது.ஆனாலும் உதவிக்கு ஓடினார்.

omkarnath sharma

காயம்பட்ட தொழிலாளர்களை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமணைகளுக்கு ஓடினார்கள்.போன இடத்தில் மருந்துக்கு  தட்டுப்பாடு.தனியார் மருத்துவமணைகளுக்கு போகவேண்டிய நிர்பந்தம்.சர்மா விசாரித்ததில் சாதாரண ஆண்ட்டிபயாட்டிக் மருந்துகளுக்கூட தட்டுப்பாடு இருந்தது புரிந்தது.தன் எதிர்கால லட்சியம் எதுவென்று எனக்கு அன்றுதான் புரிந்தது என்கிறார் சர்மா.

omkarnath sharma

சர்மாவின் மருத்துவமணை பின்புலம் அவருக்கு கைகொடுத்தது.அது உயர் ரத்த அழுத்தமோ,நீரிலிவோ நீங்கள் மருத்துவரை மாற்றினால் மருந்தும் மாரும்.பழைய டாக்ட்டர் எழுதிக்கொடுத்த இன்னும் எக்ஸ்பயரி டேட் தாண்டாத அந்த மருந்துகளை மெடிக்கல் ஸ்டோர்காரர்களும் திரும்ப வாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

omkarnath sharma

அப்படி வீனாக கிடக்கும் மாத்திரை மருந்துகளை குறிவைத்து டெல்லியின் குடியிருப்புகளில் வீடுவீடாக கையில் பையுடன் இறங்கினார்.பயணிக்கிற பேருந்துகளிலும் இதுபற்றி சக பயணிகளுடன் பேசினார்.மெல்ல மெல்ல ஆதரவு கூடியது.சிலர் நன்கொடைகளும் தந்தனர்.

கிடைத்த மருந்துகளை பிரித்து தன் வீட்டிலேயே சேமித்தார்.ஒரு அறை முழுவதும் மெடிக்கல் ஷாப்போல மருந்துகள் அடுக்கிய ரேக்குகள் இருக்கின்றன சர்மாவின் வீட்டில்.கூடவே குளிர்பதன வசதி தேவைப்படும் ஊசி மருந்துகளுக்கு ஒரு ஃபிரிஜ்ஜும் வைத்திருக்கிறார்.அங்கே இருக்கும் எல்லா மருந்துகளையும் வகை பிரித்து கணினியில் ஏற்றி வைத்திருக்கிறார். 4000 ரூபாய் மதிப்புள்ள இஞ்சக்‌ஷன் மருந்துகள் முதல் சாதாரன களிம்புகள் வரை சேகரித்து,இல்லை என்று வருபவர்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கிறார் சர்மா.