இலவச மடிக்கணினி வழங்க இன்று கடைசி நாள்…முழு விவரம் உள்ளே!

 

இலவச மடிக்கணினி வழங்க இன்று கடைசி நாள்…முழு விவரம் உள்ளே!

கணினி வாங்க முடியாத சூழலில் உள்ள சாமானிய மக்களின் பிள்ளைகளுக்கு இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

2017- 2018, 2018- 2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள்  (16.12.2019) மடிக்கணினி வழங்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

ttn

 
தமிழக அரசானது அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி கொடுத்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாகத் தமிழக அரசின் சார்பில் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களுக்குக் கணினி குறித்த அறிவுத் திறன் இன்னும் மேம்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் கணினி வாங்க முடியாத சூழலில் உள்ள சாமானிய மக்களின் பிள்ளைகளுக்கு இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ttn

இலவச மடிக் கணினி குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2017- 2018, 2018- 2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு இன்றுக்குள்  (16.12.2019) மடிக்கணினி வழங்கத் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி முடிந்து கல்லூரி சென்றுள்ள மாணவ மாணவியருக்குக் கல்லூரிகள், நிறுவனங்களிலிருந்து “Bonafied Certificate”  வாங்கி வரும் பட்சத்தில் அவர்களுக்கு மடிக்கணினி அளிக்க அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் மடிக்கணினிகள் வழங்கியது போக, கூடுதலாக தேவைப்படின் அதன் விவரத்தை டிசம்பர் 17- க்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கும், உயர்கல்வி பயிலாத மாணவர்களுக்கும் மடிக்கணினி  வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.