இலவச அதிவேக வைபை வசதி- கூகுள், சிஸ்கோ நிறுவனங்கள் அறிவிப்பு

 

இலவச அதிவேக வைபை வசதி- கூகுள், சிஸ்கோ நிறுவனங்கள் அறிவிப்பு

இந்தியா முழுவதும் இலவச அதிவேக வைபை மண்டலங்களை செயல்படுத்த உள்ளதாக சிஸ்கோ, கூகுள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இன்றைய உலகத்தில் எந்தவொரு செயலும் இன்டர்நெட் இல்லாமல் நடக்காது என்ற அளவில் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் மற்றும் மத்திய அரசும் இன்டர்நெட் வசதி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது இந்தியாவில் 4ஜி சேவை பரவலாக உள்ளது. விரைவில் 5ஜி சேவையும் வர உள்ளது.

கூகுள்

இந்திய ரயில்வே துறையின் ரயில்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் அனைத்து ரயில் நிலையங்களிலும் இலவச அதிவேக வைபை சேவையை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இலவச வைபை சேவை வழங்க உள்ளதாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான சிஸ்கோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சிஸ்கோ

இது தொடர்பாக சிஸ்கோ நிறுவனம் கூறுகையில், பெங்களூருவில் சோதனை திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஜெயாநகர் பஸ்டாண்ட் மற்றும் வர்த்தக வீதிகளில் 500 வைபை ஹாட்ஸ்பாட்ஸ் நிறுவி உள்ளோம். இந்த சோதனை வெற்றி அடைந்தால் இந்த திட்டத்தை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவோம் என்று தெரிவித்தது. அதேசமயம், கூகுள் நிறுவனம் இது குறித்து கூறுகையில், சிஸ்கோ நிறுவனம் நெட்வொர்க்கிங் மற்றும் வைபை அடிப்படைகட்டமைப்பை வழங்கும். நாங்கள் தேவையான கண்டென்ட் மற்றும் புராடக்ட்களை உருவாக்குவோம். அது எங்களது பங்குதாரர்களுக்கு வருவாயை கொடுக்கும் என்று தெரிவித்தது.