“இலவசமாக மது அளித்த இளைஞர்” நண்பர்களின் கைவண்ணத்தால் கம்பி என்னும் பரிதாபம்!

 

“இலவசமாக மது அளித்த இளைஞர்”  நண்பர்களின் கைவண்ணத்தால் கம்பி என்னும் பரிதாபம்!

அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். அதுமட்டுமின்றி டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

tt

அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சம்பாபேட் பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கதக்க இளைஞர்  ஒருவர் ‘குடி’மகன்களுக்கு இலவசமாக மது வழங்கி “உதவி” செய்துள்ளார்.   இதை கண்ட அவரது நண்பர்கள் அதை ஜாலியாக வீடியோ எடுத்துள்ளனர்.  பின்னர் அதை பேஸ்புக்கில் பதிவிட்டால் லைக்ஸ் அள்ளும் என்று மட்டமான ஐடியாவை கொடுக்க, இலவசமாக மது  கொடுத்த அந்த எட்டாவது வள்ளலோ ஓகே ஆகட்டும் …டும்…. என்று அனுமதி கொடுக்க  உடனே அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 

இதை குடிமகன்கள் மட்டுமல்லாது போலீசாரும் பார்த்துள்ளனர். இதனால் ஊரடங்கை மீறி சட்ட விரோதமாக மது பிரியர்களுக்கு மது வழங்கிய அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

உசுப்பேற்றி ரணக்களமாக்கிய நண்பர்கள் எஸ்கேப் ஆகிவிட மதுபிரியர்களின் மனம் கவர்ந்த அந்த இளைஞர்  தற்போது சோலோவாக கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.