இலங்கை LPL – கிரிக்கெட் பயிற்சியாளருக்கு கொரோனா

 

இலங்கை LPL – கிரிக்கெட் பயிற்சியாளருக்கு கொரோனா

ஐபிஎல் போட்டிகள் தொடங்குமுன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதியானதைப் போலவே இலங்கை எல்.பி.எல் போட்டியிலும் நடக்கிறது.

இலங்கையில் எல்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள், 2012 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. எல்.பி.எல் 2020 போட்டிகள் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகமாக இருந்ததால் பல முறை ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நவம்பர் 26 -ம் தேதி தொடங்கும் எல்.பி.எல் தொடரில் டிசம்பர் 10-ம் தேதி வரை லீக் போட்டிகளும், டிசம்பர் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், டிசம்பர் 18-ம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெற விருக்கிறன.

இலங்கை LPL – கிரிக்கெட் பயிற்சியாளருக்கு கொரோனா

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் என்பதால் அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடக்கவிருக்கின்றன. மேலும், பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது சந்தேகமே என்றே கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டியில் 8 அணிகள். இலங்கையின் எல்.பி.எல் போட்டியில் 5 ஐந்து அணிகள். பெரும்பாலும் மாலை நேரத்தில்தான் போட்டிகள் நடத்த திட்டமிட்டப்படுகிறது.

இலங்கை LPL – கிரிக்கெட் பயிற்சியாளருக்கு கொரோனா

எல்.பி.எல் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கொரோனா பரிசோதனைக்கும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அப்படி பரிசோதித்ததில் கொழும்பு அணியின் பயிற்சியாளர் கபீர் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொழும்பு அணிக்கு ஏற்கெனவே பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் இந்தத் தொடரிலிருந்து விலகியதால்தான் கபீர் அலி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இப்போது இவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் வேறு யார் பயிற்சி அளிப்பார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும், பயிற்சியாளர் கபீர் அலி மூலம் வீரர்களுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கக்கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.