இலங்கை டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! பும்ராஹ். தவான் அணியில் இடம்!

 

இலங்கை டி20 தொடர், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! பும்ராஹ். தவான் அணியில் இடம்!

லங்கை டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வெளியிட்டது பிசிசிஐ.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இதனை அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.

இலங்கை டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வெளியிட்டது பிசிசிஐ.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது. இதனை அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆடவிருக்கிறது.

அதற்க்கு அடுத்ததாக, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த இரு தொடருக்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

India team

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகிய துவக்க வீரர் ஷிகர் தவான் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்.

விண்டீஸ் எதிரான 3வது போட்டிக்கு முன்னர் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் காயம் காரணமாக வெளியேறினார். ஒருநாள் தொடரில் இருந்து புவனேஸ்வர் குமாரும் வெளியேறினார். இந்நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை எதிரான தொடரில் இருவரும் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக இரு தொடரில் இளம் வீரர் நவ்தீப் சைனி மற்றும் ஷர்டுல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

காயம் காரணமாக கடந்த இரண்டு தொடர்களில் பங்கேற்காமல் இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் குணமடைந்து அணிக்கு திரும்பி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

விராட் கோலி(கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(கீப்பர்), கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், யூசுவேந்திர சாஹல், நவதீப் சயினி மற்றும் ஷர்துல் தாக்கூர்.

 

 

இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல்:

 

விராத் கோலி(கேப்டன்), ரோகித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷிவம் டுபே, யூசுவேந்திர சஹல், குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், நவதீப் சைனி மற்றும் ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரிட் பும்ரா.