இலங்கை குண்டுவெடிப்பு; தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

 

இலங்கை குண்டுவெடிப்பு; தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு!

இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவிடம் இன்று வழங்கியுள்ளார்

கொழும்பு: இலங்கையில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயங்களை குறி வைத்து 8 இடங்களில் நடத்தப்பட்ட நடத்தப்பட்ட தற்கொலை படைத் தீவிரவாத தாக்குதலில் சிக்கி சுமார் 359 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

srilanka attack

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 58 பேரை கைது செய்துள்ள இலங்கை போலீசார் அவர்களின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை படை தாக்குதலுக்கு பின்னரும் இலங்கையின் ஓரிரு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால், அவற்றால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து, தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் அந்நாட்டு போலீசார், கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திருந்த மூவரை கைது செய்துள்ளனர். அத்துடன், ஹவேலியாவில் 200 டெட்டனேட்டர்களையும் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

srilanka attack

இதனிடையே, தாக்குதல் குறித்த உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதற்காக அந்நாட்டு அரசு மன்னிப்பும் கோரியுள்ளது. அதேபோல், உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது குறித்து தமது கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்றும், பாதுகாப்பு படையின் மூத்த பதவிகளில் உடனடியாக மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் அதிபா் மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

hemasri fernando

அதனைத்தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேன வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவிடம் இன்று வழங்கியுள்ளார்.

srilanka terrorists

இந்நிலையில், தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், மூன்று பேர் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் அனைவரும் நன்கு படித்த வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், பிரபல மசாலா பொருட்கள் வர்த்தகரும், கோடீஸ்வரருமான முகமது யூசுப் இப்ராஹீம் என்பவரது மூத்த மகனான இம்சத் அகமது இப்ராஹீம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இவரும் இவரது சகோதரும், முகமது யூசுப் இப்ராஹீமின் இளைய மகனுமான இல்ஹாம் அகமது இப்ராஹீமும் தற்கொலை தாக்குதல் நடத்தி தங்களது உயிரையும் மாய்த்துக் கொண்டனர்.

srilanka terrorist house

இந்த தகவல் அறிந்து அவர்களது வீட்டுக்கு போலீசார் சென்ற போது, முகமது யூசுப் இப்ராஹீமின் மருமகளான கர்ப்பிணி தற்கொலை தாக்குதல் நடத்தியதில் அவரது சிறு குழந்தைகள் உள்பட மூன்று போலீசாரும் உயிரிழந்தனர். முகமது யூசுப் இப்ராஹீமும், அவரது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களும் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க

இலங்கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மூவர் கைது: 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!