இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

 

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!

கீழக்கரையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில்  தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 அதிகாரிகள்  சோதனையிட்டனர். 

ராமநாதபுரம்  : கீழக்கரையில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 5 பேரின் வீடுகளில்  தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 அதிகாரிகள்  சோதனையிட்டனர். 

SRILANKA

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பின்னர் இலங்கை அரசிற்கு உதவியாக இருந்த  தேசிய புலனாய்வு அமைப்பினர் மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை இரண்டும் குண்டுவெடிப்பிற்குக் காரணமானவர்களைத் தேடி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் ராமநாதபுரம், கோவை, மதுரை, திருவாரூர், நாகை மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதேபோல்  என்.ஐ.ஏ.அமைப்பினர்  இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகத் துபாயில் கைது செய்யப்பட்ட முகம்மது ஷேக் மொஹ்தீன் உள்ளிட்ட 14 நபர்களை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். 

nai

இந்நிலையில் கைதானவர்களில் ராமநாதபுரம்  கீழக்கரையை சேர்ந்த ரபி அகமது, பைசல் ஷெரீப், முன்தாப்சீர், முகைதீன் சீனி, சாகுல் அகமது ஆகியோர் அடங்குவர். இவர்களின் வீடுகளிலும், வாலிநோக்கம் பகுதியில் உள்ள பாரூக் வீட்டிலும் சோதனையிட நேற்று  தேசிய புலனாய்வு அமைப்பினர்  வருகை புரிந்தனர்.  ஆனால்  வெள்ளிக்கிழமை தொழுகை நாள் என்பதால்  முகாம்களில் தங்கினர்.
இதையடுத்து   இன்று தீவிரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்த ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தத் தேசிய புலனாய்வு முகமை அமைப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கைதானவர்கள் வீடுகளில் சோதனையைத் துவங்கினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.