இலங்கை குண்டுவெடிப்புகள்; விசாரணை காவலில் வர்த்தக அமைச்சரின் தம்பி?!..

 

இலங்கை குண்டுவெடிப்புகள்; விசாரணை காவலில் வர்த்தக அமைச்சரின் தம்பி?!..

இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் அஜாக்கிரதை. அதனால் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை அதிபர் பதவி விலக வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தனர்.

கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 350-க்கும் அதிகமானோர் பலியாகினர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் பாதுகாப்பு படையினர் சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து வருகிறார்கள். இதுவரை 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இஸ்லாமிய வெறுப்பு அதிகரித்துள்ளது.

xbb

இது ஒருபுறமிருக்க, இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் அஜாக்கிரதை. அதனால் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோரை அதிபர் பதவி விலக வலியுறுத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யூதினின் தம்பியை பாதுகாப்பு படையினர் விசாரணை காவலில் எடுத்தனர்.

ffb

வர்த்தக அமைச்சரின் தம்பி கைது செய்யப்பட்டதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்திய வேளையில், பாதுகாப்பு படையினர் ஒரு மணிநேர விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து மேற்படி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் வாசிங்க

இலங்கையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மூவர் கைது: 200 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு!