இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்

 

இலங்கை குண்டுவெடிப்பில் 3 குழந்தைகளை இழந்த கோடீஸ்வரர்

46 வயதாகும் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன், லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர். அவரது 4 குழந்தைகளும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இலங்கை வந்திருக்கின்றனர். ஆண்டர்ஸின் மகள், மற்ற மூவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தன் 3 குழந்தைகளையும் இழந்துவிட்டார் அசோஸ் நிறுவனர் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன்.

b

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர். 500 நபர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் அசோஸ் நிறுவனர் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன் தனது 3 குழந்தைகளையும் பறிகொடுத்தது தெரிய வந்துள்ளது.

46 வயதாகும் ஆண்டர்ஸ் கோல்ச் போவ்ல்சன், லண்டன் மற்றும் ஸ்காட்லாந்தில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படுபவர். அவரது 4 குழந்தைகளும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட இலங்கை வந்திருக்கின்றனர். ஆண்டர்ஸின் மகள், மற்ற மூவரும் கடற்கரையில் அமர்ந்திருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கிறார்.

அசோஸ்

ஆண்டர்ஸின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள தகவலின்படி, 3 குழந்தைகள் இந்த குண்டுவெடிப்பில் உயிர் இழந்துள்ளனர். உடல்கள் சிதைந்ததால் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

as

4.5 பில்லியன் யூரோக்கள் சொத்து மதிப்புள்ள ஆண்டர்ஸ், ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர். Asos.com மற்றும் Zalando ஆகிய நிறுவனங்களில் பெரும் பங்கு வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.