இலங்கை அதிபர் தேர்தல் : மன்னாரில் வாக்காளர்கள் வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு !

 

இலங்கை அதிபர் தேர்தல் : மன்னாரில் வாக்காளர்கள் வந்த பேருந்துகள் மீது துப்பாக்கிச் சூடு !

தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். 

இலங்கையின் 8 ஆவது அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த தேர்தலில் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 1.6 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். 

Election

அதே போல், புத்தளம் என்னும் பகுதியிலிருந்து மன்னாருக்கு வாக்காளர்களை அரசு பேருந்து ஏற்றுக் கொண்டு வந்துள்ளது. அப்போது வரும் வழியில் அனுராதபுரம் தந்திரிமலைப் பகுதியில் அந்த பேருந்து மீது மர்ம நபர்கள் திடீரென கல்லால் தாக்கியுள்ளனர்.

election

அது மட்டுமின்றி பேருந்து மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பேருந்திலிருந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பின்னால் வந்த பேருந்துகள் செல்லாமல் இருப்பதற்காகக் குறுக்கில் மரங்களை வெட்டி போட்டுள்ளனர்.

Bus

இது குறித்து அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல் துறையினர் மக்களின் உதவியோடு குறுக்கே வெட்டி போடப்பட்டிருந்த மரங்களை அப்புறப்படுத்தினர். அதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்கள் யார் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.