இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி!

 

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே வெற்றி!

இலங்கை அதிபர் தேர்தலில் 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தலில் 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 35 வேட்பாளர்கள் தேர்தலில் களம் கண்ட நிலையில் சஜித் பிரேமதாசவுக்கும் கோத்தபய ராஜபக்சேவும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் இதுவரை கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Srilanka President Election2019

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவைப் பாராட்டுகிறேன். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என சஜித் பிரேமதாச தோல்வியை ஒத்துக்கொண்டார். மேலும் இலங்கை அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாச பின்னடைவை சந்தித்த அவர், இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தேர்தல் முடிவு குறித்து கோத்தபய ராஜபக்சே அவருடைய ட்வுட்டர் பக்கத்தில், “இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம். தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், 
கண்ணியத்துடன் கொண்டாடுவோம்” என பதிவிட்டுள்ளார்