இலங்கையில் செல்போன் பயன்படுத்த கெடுபிடிகள் ! கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அதிரடி !

 

இலங்கையில் செல்போன் பயன்படுத்த கெடுபிடிகள் ! கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு அதிரடி !

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

gotbaya

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் தேவாலயம், ஓட்டல்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதை அடுத்து ஏராளமானோரை கைது செய்து அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே தேர்வானார்.
இதையடுத்து இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. 

church

இதன் மூலம் ஒரே நபர் 2 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. அப்படி வைத்திருப்பவர்கள் கண்காணிக்கப்படுவர். அவர்கள் அதிக சிம் வைத்திருப்பதற்காக கைது செய்யப்படலாம். ஏற்கனவே வாங்கி பயன்படுத்தாத சிம் கார்டு இருந்தால் அதை திரும்ப நிறுவனத்திடமே ஒப்படைத்துவிடவேண்டும். சிம் கார்டு பயன்படுத்துவோர் சொந்த பெயரில் வாங்கவேண்டும் வேறு ஒருவர் பெயரில் வாங்கக்கூடாது. வேறு ஒருவருக்கும் தங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கித் தரக்கூடாது.

sim

போலீசார் வாகன தணிக்கையில் பொதுமக்களின் செல்போன் ஆய்வு செய்யப்படும். ஒத்துழைக்க வேண்டும். செல்போனில் சந்தேகத்திற்கு இடமான போட்டோக்கள், வீடியோக்கள், ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்தாலோ அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

arrest

செல்போன் காணாமல் போய்விட்டால் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்து சிம்கார்டை செயலிழக்க செய்யவேண்டும். உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்களுக்கு போன் செய்யவோ, மிஸ்டு கால் கொடுக்கவோ கூடாது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிம் கார்டுகள் கிடந்தால் எடுக்கக்கூடாது. அதனால் சிக்கல் ஏற்படும். 
விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக யாரேனும் தந்தால் நம்பி வாங்கக்கூடாது. உங்கள் போனில் இன்னொருத்தர் சிம் கார்டை போட்டு பேச அனுமதிக்கவேண்டாம். அங்கீகாரம் பெற்ற கடைகளில் மட்டுமே செல்போன் வாங்கவேண்டும். போனில் இலங்கை தொலைத்தொடர்பு ஒருங்கமைப்பு ஆணைக்குழுவின் பதிவிலக்கம் ஒட்டப்பட்டள்ளதா என்பதைக் கவனித்து வாங்க வேண்டும். புதிய சிம்கார்டு வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்ணை வாங்கவேண்டாம். இதுபோன்று ஏகப்பட்ட எச்சரிக்கை அறிவுரைகளை இலங்கை அரசு வழங்கியுள்ளது.