இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் முதல் அரசுமுறை பயணமாக சீனா சென்றிருக்கின்றார் அதிபர் மைத்ரிபாலா

இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் முதல் அரசுமுறை பயணமாக சீனா சென்றிருக்கின்றார் அதிபர் மைத்ரிபாலா

உலக அரசியலில் இது பெரும் கவனம் பெற்றிருக்கின்றது, காரணம் தேவாலய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் இலங்கைக்கு ஓடிவந்து உதவிய நாடுகள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

உலக அரசியலில் இது பெரும் கவனம் பெற்றிருக்கின்றது, காரணம் தேவாலய குண்டுவெடிப்பு நிகழ்ந்தபின் இலங்கைக்கு ஓடிவந்து உதவிய நாடுகள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா

srilanka bomb blast

அமெரிக்கா தன் புலனாய்வு குழுவினை அனுப்பியது, இந்தியா உளவுதகவல் உட்பட பலவற்றை கொடுத்தது 

இந்நிலையில் இலங்கை அதிபரின் சீன பயணம், இலங்கைக்கு நெருக்கமான நாடு சீனா எனும் தோற்றத்தினை ஏற்படுத்தியிருகின்றது

சீனா சமீபகாலமாக பல நாடுகளுடனான உறவினை மேம்படுத்துகின்றது, மலேசியாவுடனான உரசலை சரிசெய்து மகாதிர்முகமதுவினையும் தன் பக்கம் இழுக்கின்றது. இப்பொழுது இலங்கையில் இந்திய அமெரிக்க கை ஓங்காதபடி அவர்களையும் தன் பக்கம் திருப்புகின்றது

china and srilanka

அமெரிக்க இந்திய உதவிகளை மீறி இலங்கை அதிபர் சீனாவுக்கு சென்றிருப்பது சீனா அவர்களின் நண்பன் என்பதையும் அவர்களை விட்டுகொடுப்பது எளிதானது அல்ல என்பதையும் சொல்கின்றது

சீனாவும் 250 பில்லியன் இலங்கை பணத்தையும் கொடுத்து அவர்கள் எங்கள் நண்பர்கள் என உலகிற்கு சொல்லாமல் சொல்கின்றது

இது எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இனிதான் தெரியும் என்றாலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு ஒரு கசப்பான நேரமே. சீனா விரும்புவது அதனைத்தான்