இலங்கையில் அமைச்சர் அலுவலக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

 

இலங்கையில் அமைச்சர் அலுவலக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

அமைச்சரின் பாதுகாவலர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இரு ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொழும்பு: அமைச்சரின் பாதுகாவலர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் இரு ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் அதிரடியான அரசியல் திருப்பங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் பிரதமராக பதவியேற்ற ராஜபக்‌ஷே தன் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பிரதமராக ஏற்க முடியாது என்றும் அதுவரை ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பார் என்றும் அபாநாயகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க அலுவலகத்தில் இருந்து சில கோப்புகளை எடுத்து செல்வதற்காக அமைச்சரின் பாதுகாவலர்கள் இன்று மாலை வந்துள்ளனர். 

அப்போது, அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைபிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது. அதன்பின், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இரு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.