இலங்கைப் போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்துவிட்டனர்! – மீண்டும் கூறிய கோத்தபய ராஜபக்சே

 

இலங்கைப் போரில் காணாமல் போன தமிழர்கள் இறந்துவிட்டனர்! – மீண்டும் கூறிய கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் – ராணுவத்துக்கும் இடையே நடந்த பேரில் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்துப்போயினர். போருக்குப் பிறகு மஹிந்த ராஜபச்சே இலங்கை அதிபரானர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரின்போது காணாமல் போன இலங்கைத் தமிழர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக மீண்டும் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ltte-89

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் – ராணுவத்துக்கும் இடையே நடந்த பேரில் போது 10 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் பிடித்துச் சென்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து செல்லப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவித்துப்போயினர். போருக்குப் பிறகு மஹிந்த ராஜபச்சே இலங்கை அதிபரானர். அதன்பிறகு மைத்ரிபால சிறிசேனா அதிபரானர். அப்போது எல்லாம் காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கப்படும் என்று கூறிவந்த நிலையில், இலங்கை அதிபரான உடனேயே கோத்தபய ராஜபக்சே, காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்றார். 

tamil-eelam

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்றால் எப்படி இறந்தார்கள், அவர்களை கொலை செய்தது யார் என்று ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. ஆனால், சர்வதேச சமூகம் அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து வருகிறது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் வவுனியா பகுதியில் சுழற்சி முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் குடும்பத்தினரை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை அவைக்கு கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிருபர்கள் சந்திப்பில் காணாமல் போனவர்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அவர்கள் எல்லாம் இறந்துவிட்டார்கள் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இறந்துபோனவர்களை மறந்துவிட்டு, எங்களோடு சேர்ந்து பயணியுங்கள்” என்றார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த பேச்சுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.