இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப் படாது : மத்திய அரசு திட்டவட்டம் !

 

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப் படாது : மத்திய அரசு திட்டவட்டம் !

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு அமித்ஷா உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.  

சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் வாழ்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மத்திய அரசு தெரிவித்த பிறகும் போராட்டம் நீடித்தது. தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று திமுக, அதிமுக கோரிக்கை வைத்து வருகின்றன.

ttn

அதே போலச் சமீபத்தில் டெல்லி சென்ற முதல்வர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு அமித்ஷா உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.  

ttn

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநிலங்களவையில் புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த உள்துறை இணை மந்திரி நித்தியானந்த ராய், இலங்கைத் தமிழர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இரட்டை குடியுரிமை வழங்கப்படாது என்றும் அதற்கான ஒப்பந்தம் ஏதும் போடப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.