இறைச்சி வெட்டும் வியாபாரிகளுக்கு மரமுட்டிகளை வழங்கிய தளபதி ரசிகர்கள்.!

 

இறைச்சி வெட்டும் வியாபாரிகளுக்கு மரமுட்டிகளை வழங்கிய தளபதி ரசிகர்கள்.!

அட்லி- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில்.

அட்லி- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் பிகில். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

thalapathy fans

இந்நிலையில் விஜயின் பிகில் படத்தில் கறி மீன் வெட்டும் முட்டி கத்தி மீது நடிகர் விஜய் செருப்புகால் வைத்து நிற்கும் போஸ்டர் வெளியிட்டதற்கு கறிக்கடை நடத்தும் நபர்கள் சிலர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவககத்தில் மனு  அளித்தனர். கோவையைச் சேர்ந்த கோழிக்கடை கோபாலு  என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிகில் பட போஸ்டரை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பிகில் படத்தில்வரும் அந்த காட்சியை படத்தில் நீக்கி வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இறைச்சி வெட்டுபவர்களை அவமதிக்கக்கூடிய வகையில் விஜய் செயல்படவில்லை என்பதை வலியுறுத்த இறைச்சி வெட்டும் வியாபாரிகளுக்கு தளபதி ரசிகர்கள் மரமுட்டிகளை வழங்கி கெளரவித்தினர்.