இறைச்சி கடைகளில் குவியும் மக்கள் : சமூக விலகல் பின்பற்றப்படுகிறதா?!

 

இறைச்சி கடைகளில் குவியும் மக்கள் : சமூக விலகல் பின்பற்றப்படுகிறதா?!

ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சமூக விலகலை  பின்பற்றி கடைகளுக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆங்காங்கே கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடைகள், பெட்ரோல் பங்க், டாஸ்மாக் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசு நேரக்கட்டுப்பாடு விதித்தது. அதே போல ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தமிழக அரசின் அந்த விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

ttn

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மக்கள் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மீன் மார்க்கெட்டில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

ttn

ஆனால் சென்னையின் இறைச்சி கடைகளில் மக்கள், அரசு அறிவுறுத்தியதை பின்பற்றி 1 மீட்டர் இடைவெளியில் நின்று வாங்கிச் செல்கின்றனர். இருப்பினும் சில பகுதிகளில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.