இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகும் – வாபஸ் பெற இன்று கடைசி நாள்

 

இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை வெளியாகும் – வாபஸ் பெற இன்று கடைசி நாள்

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் பரிசீலனை

தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நிறைவடைந்துள்ளது.

தேர்தல்

தமிழகத்தில் வரும் 18 – ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன் தினம் நடைபெற்றது. அதில் விதிமுறைகளுக்குட்படாத  வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வாபஸ் பெற நாளை கடைசி நாள் 

வேட்புமனுக்கள் பரிசீலனையின் முடிவில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டிருந்த 1,587 வேட்புமனுக்களில், 655 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 518 வேட்புமனுக்களில் 213 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

தேர்தல்

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று இறுதி நாளாகும். வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளவர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் வழக்குகளை வாபஸ் பெறலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க 

குக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்