இறுதி நேர விற்பனை அழுத்தத்தால் பங்குச் சந்தைகள் பலத்த சரிவு

 

இறுதி நேர விற்பனை அழுத்தத்தால் பங்குச் சந்தைகள் பலத்த சரிவு

இறுதி நேர விற்பனை அழுத்தத்தால் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் பலத்த சரிவுடன் நிறைவடைந்துள்ளது

மும்பை: இறுதி நேர விற்பனை அழுத்தத்தால் பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தக நேர முடிவில் பலத்த சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

இந்திய பங்கு சந்தைக் குறியீடுகள் இன்றும் தொடர்ந்து சரிவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 345.56 புள்ளிகள் சரிந்து 34,812.99 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 103 புள்ளிகள் சரிந்து 10482.20 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தில் 1068 பங்குகள் உயர்வையும் 1527 பங்குகள் சரிவையும் கண்டன. 154 பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. மும்பை பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல் 1.86 சதவீதம் உயர்ந்து முதலிடத்தையும், டாடா மோட்டார்ஸ் 4.71 சதவீதம் சரிந்து நஷ்டத்திலும் முடிவடைந்தன தேசிய பங்குச்சந்தையில் டைடான் இன்டஸ்ட்ரீஸ் 5.56 சதவீதம் உயர்ந்து முதலிடத்தையும் எச்.பி.சி.எல் HPCL 6.73 சதவீதம் சரிந்து நஷ்டத்திலும் முடிவடைந்தன

சவுதி அரேபியாவின் கச்சா எண்ணை உற்பத்தி குறைப்பு அறிவிப்பால் கச்சா எண்ணையின் விலை உயர்வும், இதனால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவும் இன்றைய பங்கு சந்தை சரிவுக்கான காரணங்களாக கூறப்படுகின்றன.