இறுதி சடங்கில் 20 பேர்தான் கலந்து கொள்ளலாம்… ஆனால் மதுகடை அருகே ஆயிரம் பேர் கூடலாம்… கிண்டல் அடித்த சிவசேனா எம்.பி.

 

இறுதி சடங்கில் 20 பேர்தான் கலந்து கொள்ளலாம்… ஆனால் மதுகடை அருகே ஆயிரம் பேர் கூடலாம்… கிண்டல் அடித்த சிவசேனா எம்.பி.

இறுதி சடங்கில் கலந்து கொள்ள 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் ஆனால் மது கடை அருகே ஆயிரம் பேர் கூடலாம் ஏன்னா மது கடைகளில் ஸ்பிரிட்ஸ் உள்ளது என சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கிண்டல் செய்தார்.

மத்திய அரசு, கடந்த 4ம் தேதி முதல் மது கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளித்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டன. மது கடைகள் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் குடிமகன்கள் கொரோனா வைரஸை மறந்து முண்டியத்து மதுவை வாங்கி சென்றனர். மகாராஷ்டிராவின் மும்பையில் மது கடைகளில் நிலவிய கூட்ட நெரிசலை கண்ட  அம்மாநில அரசு அங்கு மது கடைகளை திறக்க தடை போட்டது.

இறந்தவரின் உடல் இறுதி சடங்கு செய்யும் பணி

இந்நிலையில் மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத், இறுதி சடங்கையும், மது பழக்கத்தையும் ஸ்பிரிட்டுன் இணைத்து கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், இறுதி சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏனென்றால் உடம்பிலிருந்து ஸ்பிரிட் (ஆவி) ஏற்கனவே போய் விட்டது. ஆனால் மது கடைகள் அருகே ஆயிரம் பேர் கூட அனுமதிக்கப்படுவர் ஏனென்றால் கடைகளில் ஸ்பிரிட் (சாராயம்) உள்ளது என பதிவு செய்துள்ளார்.

மது வாங்க மது கடை முன்பு குவிந்த மக்கள்

நாட்டில் மது விற்பனை மீண்டும் தொடங்கியிருப்பதை மக்கள் மட்டுமல்ல மாநில அரசும் வரவேற்கிறது. மகாராஷ்டிரா அரசுக்கு மது முக்கிய வருவாய் ஆதாரமாகும். கடந்த 2019-20ம் நிதியாண்டில் மது மீதான வரியாக மாநில அரசுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளதாக அம்மாநில கலால் துறை தகவல் தெரிவித்துள்ளது. நம் நாட்டில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா என்பது குறிப்பிடத்தக்கது.