“இறுதிப் போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டோம்!” – கேப்டன் ஹர்மன்பிரீத் வருத்தம்

 

“இறுதிப் போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டோம்!” – கேப்டன் ஹர்மன்பிரீத் வருத்தம்

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மெல்போர்ன்: மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. முதன்முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.

ttn

இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேசுகையில், ‘‘லீக் போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இறுதி போட்டியில் சில கேட்ச்களை தவற விட்டது துரதிருஷ்டமானது. எதிர்வரும் ஒன்றரை ஆண்டுகள் இந்திய அணிக்கு மிக முக்கியமானது. எங்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். உலகக்கோப்பைக்காக கடினமான வகையில் பயிற்சி மேற்கொண்டோம். சரியான திசையில் ஒவ்வொரு வருடமும் முன்னேற்றம் அடைந்து வந்தோம். இன்னும் அதிக கவனத்துடன் விளையாடுவது அவசியம். சில நேரங்களில் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடியவில்லை’’ என்றார்.