இறப்பதற்கு முன் ‘லக்ஷ்மன் ஸ்ருதி’ ராமன் கொடுத்த அதிர்ச்சி… உருகும் சின்னக் கலைவாணர்..!!  

 

இறப்பதற்கு முன் ‘லக்ஷ்மன் ஸ்ருதி’ ராமன் கொடுத்த அதிர்ச்சி… உருகும் சின்னக் கலைவாணர்..!!  

சமீபத்தில் இசை ரசிகர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்திய சமபவம் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் நிர்வாகி ராமன் மறைந்ததுதான். தனி நபர்களாகத்  தொடங்கிய இசைக்குழுவை மிகவும் சிரமத்திற்கிடையில் வளர்த்தெடுத்தனர். மெல்லிசை இசைக்குழுக்கள் தமிழகமெங்கும் இருந்தாலும்  இவர்கள் அவற்றிலிருந்து வேறு பட்டு இருந்ததோடு பாடல்களை ரெக்கார்டிங்கில் கேட்டது போன்ற ஒரு தரத்தில் கொடுத்தனர்

சமீபத்தில் இசை ரசிகர்களை அதிர்ச்சியில்  ஆழ்த்திய சமபவம் லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் நிர்வாகி ராமன் மறைந்ததுதான். தனி நபர்களாகத்  தொடங்கிய இசைக்குழுவை மிகவும் சிரமத்திற்கிடையில் வளர்த்தெடுத்தனர். மெல்லிசை இசைக்குழுக்கள் தமிழகமெங்கும் இருந்தாலும்  இவர்கள் அவற்றிலிருந்து வேறு பட்டு இருந்ததோடு பாடல்களை ரெக்கார்டிங்கில் கேட்டது போன்ற ஒரு தரத்தில் கொடுத்தனர்.

இவர்கள் இசையில் பாடாத திரையுலக ஜாம்பவான்கள் யாருமே இல்லை. கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கும் இந்த குழுவில் லஷ்மன் மேடையை கவனித்துக்கொண்டார். ராமன் வெளிநாட்டு  பயணம் பணம் கொடுக்கல் வாங்கல் என்று நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராமன் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல்  நலமில்லாமல் இருந்த அவருக்கு வயிற்ரு வலியும் இருந்ததாக கூறப்படுகிறது.

lakshman-sruthi

ராமன் இறந்து போவதற்கு முன்பு சில கடமைகளை செய்துவிட்டுப்போனது பலரையும் நெகிழவைத்திருக்கிறது. ஒரு நாள்: நடிகர் விவேக் விட்டிற்கு ராமன் கொடுத்ததாகச் சொல்லி ஒரு ஆர்மோனிய பெட்டியைக்  கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்கள்  லஷ்மன் ஸ்ருதி  நிர்வாகத்தினர்.

படப்பிடிப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய விவேக்கிறகு ஆர்மோனிய பெட்டியைப்  பார்த்ததும்  ஆச்சர்யப்பட்டு , நாமதான் ஆடர் பண்ணலையே… நமக்கு எதுக்கு கொடுத்துவிட்டிருக்கார்…! ஒரு வேளை வேறு யாருக்கோ கொடுக்க வேண்டியதை நம்ம வீட்டில் மாத்திக் கொடுதிட்டுப் போயிட்டாங்களோ… என்று பல்வேறு யோசனைகளோடு  ராமனுக்கு போன் போட்டிருக்கிறார். 

எதிர் முனையில் ராமன் போனை எடுத்ததும்” என்ன ராமன்… பெட்டி மாறிடுச்சா… “ என்று எப்போதும் போல் கலகலப்பாகவே உறையாடலைத் தொடங்கியிருக்கிறார் விவேக். எப்போதும் உற்சாகமாகப் பேசும் ராமனின் குரலில் அன்று உற்சாகம் மிஸ்ஸிங்.அதற்கான காரணம் என்னவென்று அப்போது விவேக் கவனிக்கவில்லை! “ சார்,அது உங்களுக்குத்தான்…” என்று ராமன் அழுத்தமான குரலில் சொல்லியிருக்கிறார்.விவேக் மறுபடியும் “ எங்கிட்டதான் பியானோ இருக்கே… இது எதுக்கு..? சரி கொடுத்து விட்டுட்டிங்க அதுவும் இருக்கட்டும். பில் எவ்வளவுன்னு சொல்லுங்க கொடுத்தனுப்பிறேன்” என்று சொல்ல… “சார், அது விலைக்கு குடுக்கல… என் ஞாபகார்த்தமா உங்களுக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணிச்சு… அதான் கொடுத்தனுப்பினேன்” என்று ராமன் உருகவும் விவேக்குக்கு ஒன்றும் புரியாமல் “ எனெக்கெதுக்கு ஞாபகப் பரிசு… “ என்று கேட்டிருக்கிறார்.

vivek-at-funeral

“என்னை அப்துல் கலாம் அய்யாகிட்ட நீங்கதான் அறிமுகம் செஞ்சு வச்சீங்க…  கலாம் அய்யா கடலூர்ல நடந்த  கூட்டத்தில் பேசும்போது என்னையும் அழைத்துப்போய் அதே மேடையில் உட்காரவச்சு அழகு பார்த்தீங்க… இதல்லாம் எப்படி மறக்க முடியும்… !? என்று சொல்லிவிட்டு சட்டென மவுனமாகியிருக்கிறார். “ ராமன்… “ என்று விவேக் அழைக்க… குரலில் உற்சாகத்தை வரவைத்தபடி “ அந்த நன்றிக்கடனை அடைக்கிறதுக்காத்தான் இந்த ஆர்மோனிய பெட்டி” என்று சொல்ல, விவேக் “ நன்றி ராமன் “ என்று சொல்லி அந்த உரையாடலை நிறைவு செய்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்த மூன்றாவது நாள் அவர் இறந்த போனதாக  வந்த செய்தி,விவேக்கின் காதுகளில் இடிபோல் இறங்கியதாக இப்போது நினைவு கூர்ந்தார்.

ராமன் கொடுத்தனுப்பிய அந்த ஆர்மோனிய பெட்டியை அதுவரை பிரிக்கக்கூட இல்லை..! உடனடியாகப் பிரித்து அதை வாசித்தபடி விவேக் பாடிய பாடல் கீழே உள்ள லிங்கில்…