இறந்த மகனின் நினைவாக தாய் செய்த நெகிழ்ச்சியான விஷயம்! உலகம் முழுதும் குவியும் பாராட்டுகள்!

இறந்த மகனின் நினைவாக தாய் செய்த நெகிழ்ச்சியான விஷயம்! உலகம் முழுதும் குவியும் பாராட்டுகள்!

தாய் பாசத்திற்கு ஈடு இணையே கிடையாது என்பார்கள். இறந்து போன தன் மகனின் நினைவாக இந்த தாய் செய்த செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகன் இறந்த சோகத்தையும் மீறி, பல குழந்தைகளின் பசியைத் தீர்த்து வைத்திருக்கிறார் இந்த தாய்.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்த சியரா ஸ்ட்ராங்பீல்ட் எனும் பெண்மணி கர்ப்பம் தரித்திருந்தார். கர்ப்ப காலத்தில் 20 வாரங்கள் முடிவுற்றதும் அருகில் இருந்த மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைகளுக்காக சென்றிருந்தார். வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை அரிய வகை மரபணு நோய் தாக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

mother

இந்த மரபணு நோயின் தாக்குதலால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும், அப்படியே மருந்துகளை உட்கொண்டாலும், குழந்தைப் பிறந்ததும் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியாது என்று கூறி, சியராவை, வயிற்றில் இருக்கும் கருவை கலைத்து விட ஆலோசனை கூறினார்கள். மருத்துவர்களின் இந்த ஆலோசனையை ஏற்க மறுத்த சியரா, தேதி குறித்த நாட்களுக்கு முன்பாகவே குறைபிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உடனடியாக பிறந்த குழந்தைக்கு ஆசையாசையாய் ‘சாமுவேல் லீ’ என பெயர் சூட்டி தம்பதிகள் சந்தோஷப்பட்டார்கள்.   ஆனால், துரதிஷ்டவசமாக இவர்களுக்குப் பிறந்த குழந்தை அடுத்த 3 மணி நேரத்திலேயே இறந்து விட்டது. இதனால் மனஉளைச்சலுக்குள்ளான தாய் சயிரா, தன் குழந்தை நினைவாக யாரும் எதிர்பாராத முடிவை எடுத்தார்.
தனது முடிவு குறித்து, தனது முகநூல் பக்கத்தில், ‘என் குழந்தையைத் தான் என்னால் காப்பாற்ற முடியவில்லை. பால் இல்லாமல் அவதிப்படும் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும்’  என்பதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக பதிவிட்டிருந்தார். மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த பிரசவ தேதிக்கு 63 நாட்களுக்கு முன்னதாக சாமுவேல் லீ பிறந்ததால், அவன் நினைவாக 63 நாட்களுக்கு தேவையான தாய்ப்பாலை தானமாக வழங்கியதாகவும், என்னுடைய இந்த முடிவால் என் மகன் கண்டிப்பாக பெருமை கொள்வான் என்றும பதிவிட்டுள்ளார்.