‘இறந்த நபருக்கு சிறந்த எதிர்காலம் ‘என சான்றிதழ் -அரசு அதிகாரியின் அலட்சியம் ….

 

‘இறந்த நபருக்கு சிறந்த எதிர்காலம் ‘என சான்றிதழ் -அரசு அதிகாரியின் அலட்சியம் ….

உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா தொகுதியில் உள்ள சிர்வாரியா கிராமத்தில் ஜனவரி 22 ஆம் தேதி  லக்ஷ்மி சங்கர் என்ற முதியவர் நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு   இறந்தார். அவர் இறந்ததும் அவரது மகன் கிராம அதிகாரியிடம்  சென்று, சில நிதி பரிவர்த்தனைகளுக்கு தனது தந்தையின்  இறப்புச் சான்றிதழை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். உ

உத்தரபிரதேசத்தின் கடந்த மாதம் இறந்த ஒரு முதியவருக்கு ஒரு கிராம அதிகாரி  ‘சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்’ என்று இறப்புச் சான்றிதழை வழங்கியது சமூக ஊடகங்களில் வைரலாகியது . 
உன்னாவ் மாவட்டத்தில் அசோஹா தொகுதியில் உள்ள சிர்வாரியா கிராமத்தில் ஜனவரி 22 ஆம் தேதி  லக்ஷ்மி சங்கர் என்ற முதியவர் நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு   இறந்தார். அவர் இறந்ததும் அவரது மகன் கிராம அதிகாரியிடம்  சென்று, சில நிதி பரிவர்த்தனைகளுக்கு தனது தந்தையின்  இறப்புச் சான்றிதழை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். உடனே அந்த அதிகாரி  இறப்புச் சான்றிதழை வழங்கியது மட்டுமல்லாமல், இறந்தவருக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அமைய வாழ்த்தும் தெரிவித்து வழங்கினார் 
அந்த கிராமத் தலைவர் இறப்புச் சான்றிதழில் ,- “மெயின் மை உஜ்வால் பவிஷ்ய கி காம்னா கர்த்தா ஹூன் (அவருக்கு பிரகாசமான எதிர்காலம் வாழ்த்துகிறேன்).”என்று எழுதினார் 
இந்த கடிதம் திங்களன்று சமூக ஊடகங்களில் வைரலாகியது, அதன் பின்னர் அந்த கிராமத் தலைவர் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டு புதிய இறப்பு சான்றிதழை வழங்கினார்.