இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை.. வனத்துறை அதிகாரிகள் ஆய்வு !

 

இறந்து கிடந்த கருஞ்சிறுத்தை.. வனத்துறை அதிகாரிகள் ஆய்வு !

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கடக்கோடு கிராமத்தில் நிறையத் தேயிலைத் தோட்டம் இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கடக்கோடு கிராமத்தில் நிறையத் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. அங்கு ஒரு சில கருஞ்சிறுத்தைகள் இருந்து வருகின்றன. அதில் ஒரு கருஞ்சிறுத்தை தேயிலைத் தோட்டத்திலேயே இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், உயிரிழந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை எடுத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில், அந்த  கருஞ்சிறுத்தைக்கு 3 வயது இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. 

tn

இதனையடுத்து, அந்த  கருஞ்சிறுத்தையை பிரேதப் பரிசோதனை செய்ததில் அது தொற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில  கருஞ்சிறுத்தைகளே இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு  கருஞ்சிறுத்தை விஷம் வைத்துக் கொல்லப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீண்டும் ஒரு  கருஞ்சிறுத்தை உயிரிழந்துள்ளது வனத்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.